முத்துக் குமரனுக்காய் காறி உமிழுங்கள்-முத்துக்குமார புராணம்-சில பதில்கள்..

இந்த பதிலைப் படிக்கும் முன்னர் என் இந்த பதிவில் நண்பர்களின் கேள்விகளைப் படித்துவிட்டு வாருங்கள் 
#################################################

தன் கருத்துகளை மென்மையாகவும் வன்மையாகவும் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி… ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..தமிழன் சாகக்கூடாது எனத்தான் நாம் போராடுகிறோம்.. அவன் இலங்கையில் இறந்தாலும் இங்கே சாஸ்திரி பவனில் இறந்தாலும் தமிழனின் இறப்பு கொடுமைதான்.. முத்துக்குமரனை நானும் தியாகி என சொல்லிச் செல்வதால் என்ன மாற்றம் வருமென நினைக்கிறீர்? இதைபோல் ஆயிரமாயிரம் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறோம்..இது போன்றதொரு உயிர் தியாகத்தால் என் சகோதரன் இலங்கையில் சாவது நிறுத்தப் படுமென முட்டாள் தனம் கொண்டு உயிர்த்தியாகம் செய்ய கிளம்பக் கூடும்! நீங்கள் அதை அனுமதிக்கிறீரா? அவன் தன்னை எரித்துக்கொள்கையில் அருகிளிருந்திருந்தால் அதனை பெரிய தியாகமென சொல்லி கைதட்டிக் கொண்டிருப்பீர அல்லது “முட்டாளே! பெற்றோலை உன் மீது வூற்றிக்கொள்ளதே என் தமிழனை எதிர்ப்பவன் மீது வூற்று!” என சொல்லி இருப்பீரா? இவன் உயிர் நீத்தல் தியாகம்தான்.. அதற்க்காக? இதனை ஆதரிப்பதுதான் தமிழன்.. மற்றவன் துரோகி எனில் நான் துரோகியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.. முத்துக்குமரன் உயிர்நீத்ததை நான் கண்டிக்கிறேன்.. இதற்காய் என் முகத்தில் காரி வுமிழுங்கள் .. இதை தடுக்காத உங்கள் முகத்தில் நானும்.. தமிழன் இறந்தால் இவர்கள் மாறிவிடுவார்கள் என நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? இவர் இறந்ததற்கு கொந்தளிப்பு எனில் இத்தனைநாளாய் இலங்கையில் இறந்தவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் ? நீ உயிருடன் என்னோடு இருக்கவேண்டும் என என்னும் உன் சகோதரனாய் உன்னை எச்சரிக்கிறேன் நீ சாக முயலாதே! உயிரோடு இருந்து போராடு! ஆனால் நாம் இருவரும் சேர்ந்து இதனை அரசியலாக்கும் அவர் முகத்தில் உமிழலாம்…

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

@ Thayaalan:

என்ன பண்ணனும்? இருந்து போராடாம இறந்து போரடனும்னு சொல்றீங்களா?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

@Nilavan:

         1. தமினுக்கு எங்கு நிம்மதி?

                   சத்தியமாய் இலங்கையில் இல்லை… தமிழ் ஈழம் மலர்ந்தாலும்..

      2.தமிழனுக்கு எந்த நாடு உரித்துடையது?

                       இதற்கான பதில் தங்களின் அடுத்த கேள்வியிலேயே இருக்கிறது
       3.தமிழன் இல்லாத நாடு ஏது?
       4.தமிழன் என்ன குறை செய்தான்?
       5.இந்தியாவில் தமிழ் நாடு தவிர தமிழன் நிம்மதியாக வாழக்கூடிய இடம் ஏது?
       6.என்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன?

               மற்ற இந்திய மொழிகளுக்கு கிடைக்கும் மதிப்பைவிட தமிழுக்கு அதிக மதிப்பு கிடைக்கிறது என்கிறேன்.. தாங்கள் மறுப்பீரா?   
7.தமிழ்மொழியில் சரளமாக உரையாட, எழுத முடியுமா?

தமிழ் நாட்டிலேயே இருந்தால் போதும் என நினைத்தால் தமிழ் மட்டுமே போதும்.. என் குடும்பத்தில் நான் மட்டும்தான் நகரத்தில் இருக்கிறேன்.. சிறிதளவு  ஆங்கிலத்துடன்.. பெற்றோர் கிராமத்தில் தமிழுடன் மட்டும்…    
8.தமிழ் அழிவது கண்களில் தெரியவில்லையா?

எதை அழிவு என்கிறீர்?மொழியின் சில மாற்றங்களையா? அது அழிவு அல்ல! முன்னேற்றம்.. தமிழ் மொழி தோன்றிய காலத்தில் இருந்த எழுத்துகளிலும் வார்த்தைகளிலும் ஏதேனும் ஒன்றினை இன்று உபயோகிக்கிறீர்களா? இல்லை தானே! தமிழ் அழிந்துவிட்டது என அர்த்தமா?  தமிழ் மாறி இருக்கிறது! வளர்ந்திருக்கிறது! தற்ப்போதைய மாற்றங்களையும் வளர்ச்சி என எடுத்துப் பழகுங்கள்!    
9.உயிர்களை துன்புறுத்தும்போதே வழக்குப்போடும் காலத்தில் மனிதர்கள் ஈழத்தில் கொன்றொழிக்கப்படுகின்றார்களே அது கூடவா உங்கள் கண்களுக்குத்தெரிய மறுக்கின்றது?

கண்ணுக்குத் தெரியவில்லை என்கிறீரா? ஊடகங்கள் தான் இருக்கிறதே..தினந்தோறும் கண்ணேர் விடுகிறோம் நாம்! அதற்க்கு நடுவிலும் “படிக்காதவன் வெற்றி நடை போடுகிறது” என விளம்பரம் செய்கிறார் அவர்..   
10.நீர் உண்மையில் மனிதநேயம் உள்ளவரா?

சகோதரன் தீக்குளித்ததை தியாகம் என பாராட்டி இன்னும் சில சகோதரர்களை தீக்குளிக்க மறைமுகமாய்த் தூண்டும் இந்த வூடகங்களையும் அதையே தொடரும் தங்களைப் போன்றவர்களையும் விட அடுத்த சகோதரன் இந்த முட்டாள் தனத்தையே செய்துவிடக்கூடதே எனப் பதறும் எனக்கு கொஞ்சம் மனித நேயம் அதிகம்தான்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

@ maddy

“நீ எல்லாம் காமத்து பால் பற்றி கதை எழுத மட்டுமே லாயக்கு..”
“முத்துகுமார் ஒரு தியாகி .. அவரை பற்றிய அவதூறான கருத்துக்களை தயவு செய்து பிரசுரிக்கதே துரோகி..”

அட என் அசட்டு நண்பரே.. கவிதையை தயவு செய்து புரிந்து கொள்ள முயலும்.. அதில் முத்துக்குமரனை நான் எதுவும் தவறாய்ச் சொல்லவில்லை.. அவரை வைத்து வெறும் அரசியல் செய்யப் போகும் இவர்களைப் பற்றி தெரியாமல் தன் விலை மதிப்பில்லா உயிரை முட்டாள் தனமாய் நீத்தான்! அதைத்தான் சொன்னேன்! உங்கள் தந்தையோ,தம்பியோ ,அண்ணனோ இதே காரியத்தைச் செய்தால் அதை தியாகமாய் மட்டும் நீ எடுத்துக்கொள்வாயா நண்பனே? காமத்துப் பால் கவிதைகள் மட்டுமே உங்களைப் போல் சிலருக்கு முழுமையைப் புரிகிறது நான் என்ன செய்வேன் ….

இந்த பதிவினையும் ஒன்றுக்கு இரண்டு முறை படித்து என்ன சொல்லி இருக்கிறேன் என புரிந்துகொண்ட பின்னோட்டமிடுங்கள்.. அல்லது புரியாமல் கேள்வி கேளுங்கள் அடுத்த பதிவிலும் பதில் சொல்கிறேன்.. அடப் போங்கடா…           

3 Comments

  1. 2
    யாழ்நிலவன் Says:

    சீ தூ… வெட்கம் கெட்டவனே? உனக்கு தமிழ் நாட்டில் இருந்தால் கூட தமிழ் அழிவது காண்களில் தெரியவில்லை, பேச்சும் மூச்சும் மட்டும் இருந்தால் போதாது. தமிழ்நாட்டில் ஹிந்தி ஓர் கட்டாய பாடம் ஆனால் மெற்றிக்குலேசன் கல்விக்கூடங்களில் என்னவென்றால் நிலமை மாறுகின்றது. தமிழ் மொழி ஒரு பாடமாக எடுக்காமலே பல குழந்தைகள் தமிழ்நாட்டில் வளர்கின்றனர். ஓ தமிழ் தமிழ்நாட்டில் வாழ்கின்றதா. விரல்விட்டெண்ணும் எத்தனைபேர் தமிழில் தமிழோடு வாழ்கின்றனர் என்று. ஆதாரங்கள் கேட்டால் நான் தரத்தயாராகத்தான் இருக்கின்றேன். காலம், நேரம் கிடைக்கவில்லை ஒர் விளக்கமான பதிலை உமக்கனுப்ப, சந்தர்ப்பம் கிடைக்கும்போது அனுப்பி வைக்கின்றேன்.

  2. 3
    Alphonsa Says:

    Hmmm… :)

    //அவரை வைத்து வெறும் அரசியல் செய்யப் போகும் இவர்களைப் பற்றி தெரியாமல் தன் விலை மதிப்பில்லா உயிரை முட்டாள் தனமாய் நீத்தான்! அதைத்தான் சொன்னேன்! உங்கள் தந்தையோ,தம்பியோ ,அண்ணனோ இதே காரியத்தைச் செய்தால் அதை தியாகமாய் மட்டும் நீ எடுத்துக்கொள்வாயா நண்பனே? காமத்துப் பால் கவிதைகள் மட்டுமே உங்களைப் போல் சிலருக்கு முழுமையைப் புரிகிறது நான் என்ன செய்வேன்// …..
    thakka badhil[adi illai :) ] koduthirkeenga thozha!


RSS Feed for this entry

Leave a Comment