பசங்க.. குழந்தைகளுக்கான பெரியவர்கள் படம்னு யாரோ சொன்னாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு படம் பாக்கும்போதுதான் புரிஞ்சுது.
உள்குத்து 1:ஒரு சிறுவன். கடந்த அஞ்சு வருசமா கிளாஸ் லீடர். ஊர்ல யாருக்கும் பிடிக்கலயாம். போலீஸ்ட்ட போய் சொல்றாங்க. அவங்கள Arrest பண்ண எங்களுக்குத்தான் பிரச்சினைன்னு போலீஸ் சொல்லிடுது.
உள்குத்து 2:
‘கிட்டத்தட்ட வில்லன்’ சிறுவனோட பெயர் ‘ஜீவன் நித்யானந்தம் C.M’
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவனோட பெயர் ‘அன்புக்கரசு I.A.S’
உள்குத்து 3:
இரண்டு பசங்க.பக்கத்து பக்கத்து வீடு. ஒருத்தனோட தங்கச்சிய இன்னொருத்தன் அடிச்சிடுறான். தட்டிக் கேட்கவேண்டிய சித்தப்பன கேட்டா சின்னப் பசங்க விவகாரத்துல நான் தலையிட முடியாதுன்னு ஒதுங்கிகிறான். காரணம் அடிச்சவனோட அக்கா சித்தப்பனோட காதலி.
உள்குத்து 4:
ஒரு பையனோட அப்பாவ இன்னொரு பையன் கிண்டல் பண்றான். அவங்க ரெண்டு பெரும் அடிச்சுக்க ஆரம்பிச்ச்சு ஆதரவு,எதிர் கோஷ்ட்டினு ஸ்கூல் மொத்தமும் அடிச்சுக்குது. எல்லோரும் தேசிய கீதம் கேட்டா மட்டும் எழுந்து நிக்கிறாங்க.
தலைமைஆசிரியர் வந்து எல்லாரையும் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன்னு சொல்லிகிட்டே தோப்புகரணம் போடா சொல்றாரு. (இதோட உண்மை அர்த்தத்த விளக்குற வசனம் படத்துல இருக்கு)
உள்குத்து 5:
“கிட்டத்தட்ட ஹீரோ” சிறுவனை லீடர் பதவியில இருந்து இறக்க கொஞ்சம் சாக்பீஸ அவன் பையில “வில்லன் குரூப்” பசங்களே போட்டு மாட்டி விட முயற்சி பண்றாங்க.
உள்குத்து 6:
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவன் வேற ஸ்கூல்ல சேர்ந்தவன். அவன் மாணவர் லீடருக்கான தேர்ல்தல்ல நிக்கும்போது யாருமே ஆதரிக்கல. அந்த மாணவனுக்கு நெருக்கமான ஒரு பெண் தன் சகாக்களிடம் பரிந்துரை செய்து அவனை ஜெயிக்க வைக்கிறாள்.
உள்குத்து 7:
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவனுக்கு கைத்தட்டல் ஊக்கம் கொடுக்கிறது. ‘கிட்டத்தட்ட வில்லன்’ சிறுவன் பேனா உள்ளிட்ட பரிசுகளில் மயங்குகிறான்.
உள்குத்து 8:
ஹீரோ சிறுவன் அறிமுகத்தில் வெள்ளை நிறச் சட்டையும் வருவரை நிற்கும் சிகப்பு நிற “டை” உடன் வருகிறான்
உள்குத்து 9:
எல்லோரும் திருந்தி ஒன்று சேரும் இடத்தில் கடைக்குட்டித் தம்பி மறுபடியும் தொடங்கி வைக்கிறான்.
உள்குத்து 10:
அந்த கிளாஸ் லீடர் அமைதியா இருந்தாலும் அவன தப்பு செய்ய சொல்லி தூண்டுறது வலது பக்கத்துல இருக்கிற ஒரு பையன். அவன் கூட எப்பவும் குண்டா ஒரு பையனும் ஒல்லியா கண்ணாடி போட்ட ஒரு பையனும் இருக்காங்க
- இந்த உள்குத்துகளின் உண்மையான அர்த்தம் என்னன்னு என்கிட்டே கேட்காதீங்க. ரத்தத்தின்ரத்தங்களிடமும்,உடன்பிறப்புகளிடமும் அடிவாங்கும் சக்தி எனக்கு இல்லை
- இன்னும் பல உள்குத்துகள் படம் பார்க்கும் பொழுது கவனிச்சேன். இப்ப மறந்துடுச்சு.
- இந்த உள்குத்துகளெல்லாம் பாண்டிராஜ் plan பண்ணி வச்சாரு எத்தன தானாக அமைஞ்சதுன்னு தெரியல