ஆனந்த் Vs விகடன் 13.5.2009

ஆனந்தவிகடனில் சில வார்த்தைகளை வாசிக்கையில் எழுத்துகளில் பிறக்கும் சில வார்த்தைகள் என் மேனியெங்கும் அலைந்து திரிந்து பரவெளிகளில் சஞ்சரித்து சில நாட்களில் செத்துப் போகிறது. கட்டிப்போட்டு வளர்க்கும் சிறுமுயற்சி இந்த தொடர்.
O
தன்னை ஒளித்துக் கொண்டு
கிரிக்கெட் கிசுகிசு எழுதும்
ஒருவனைப்
படிப்பவர்களின் எண்ணிக்கை
செத்துப் போகும்
சகோதரர்கள் பற்றி எழுதும்
ஒருவனைப்
படிப்பவர் போல் இரு மடங்கு

Page No 12
O

கனவில் செய்த உதவியின்
பரிசு
கண்ணாடியில் பணம்
உண்ணா விரதத்திற்கு
போர் நிறுத்தம்
Page No 19
O

பத்திரிகைக் காரனுக்குத் தெரியும்
ஓட்டின் விலை
படித்தபின்
இன்னும் ஒரு
புதிய தேர்தல் பார்வையாளர்
Page No 21
O

வடக்கிருந்த பிசிராந்தையார்
நீட்சிகள்
காத்திருக்கின்றன
லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும்
கோப்பெருஞ் சோழர்கள்தான் பாவம்
தேர்தல் நேரத்தில் எப்படி?
Page No 21
O

இருவர் எறிந்த ஷூக்களைப்போல்
இவர்களுக்குப் பயமில்லை
எங்கோ எறியப்படும்
ஷெல்கள் !
Page No 35
O

தீவிரவாதி குறித்த
குழந்தையின் புகைப்படத்தில்
T.V யில் ஒருவன்
தொப்பியும் தாடியுமாய் இருந்தான்
அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டு
சிகப்புத்துண்டால்
முகம் துடைத்துக் கொண்டான் அவன்!
Page No 56
O

நாய் செத்தது
படித்த ஒரு அரசன்
நாய்களைக் காக்கப் பணித்தானாம்!
ரத்தத்தில் எழுதிய எங்கள் பிணங்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது
யார் இங்கே?
Page No 58
O

எல்லாத் தலைவர்களும்
எல்லத்த் தளபதிகளும்
எல்லாப் புரட்ச்சிகளும்
நடித்தாயிற்று எங்களைக்
காப்பதாய்
நீயும் கலந்துகொள்
கேவலம் நடிப்புதானே!
Page No 59
O

கல்யாணத்துக்கு ஆற்றில் இறங்கும்
கடவுளின்
அவதாரத்திற்குக் காத்திருக்கிறோம்
கடலில் இறங்கி எங்களைக் கரை சேர்க்க
பானைக்கு கோபித்து திரும்புதல்
போல் மீண்டும் திரும்பிவிடாதே
மஞ்சள் இல்லாத சிகப்புத்
தோள் துண்டிற்கு சினந்து
O

நகங்களைப் புடுங்கிக்கொண்டு
சமாதானத்திற்கு வரவேண்டுமாம்

பற்களை உடைத்துக் கொண்டு
சமாதானத்திற்கு வர வேண்டுமாம்

மயிர்களையும் சிரைத்துவிட்டு
சமாதத்திற்கு அழைக்கிறது

கையில் கத்தி வைத்திருக்கும்
ஒரு கிழட்டுச் சிங்கம்
Page No 101
O

ஓநாய்கள் சைவாமாகாது
ஒத்துக் கொண்டது
உறுதிமொழிகளுக்கு நடுவில் ஒரு
அரசியல்வாதி
Page No 103
O

தொடரும்

Leave a Comment