சில ரோஜாக்கள்


இரண்டாயிரம் ரூபாய்,கோழி பிரியாணி,குவாட்டர்
மே 15, 2009, 6:53 மு.பகல்
கோப்பு வகை: Poems

ரத்தம் தெறித்து செத்துப்
போகட்டும் தமிழினம்
ஓநாய் விருந்தில்
மானம் இழக்கட்டும் தமிழச்சி
கண் கட்டி கண்டவற்றில்
குண்டு பட்டு சாகட்டும் தமிழன்
பதுங்குகுழிகள் பாஸ்பரஸ் பூக்களுடன்
அடக்கம் செய்யப்படட்டும் பச்சை குழந்தை
அறுத்தெறியப் படட்டும்
அமுது தமிழ் பேசும் நாவும்- அந்நாவிற்கு
அமுதூட்டிய கொங்கையும்

எவனும் எப்படியும் செத்துத் தொலையட்டும்
குடும்பத்திற்கு பதவி பிரிப்பவர்
ஊரை விற்று வீட்டில் சேர்ப்பவர்
எவனாவது வாருங்கள்
இரண்டாயிரம் ரூபாய்,
கோழி பிரியாணி இரண்டு பார்சல்
மற்றும் ஒரு குவாட்டர் மட்டுமே
என் ஓட்டின் விலை


1 மறுமொழி இது வரை
மறுமொழியவும்

?

Comment by pukalini




மறுமொழியவும்
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>