
O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா ![]()
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! சம்பந்தமில்லாத ஹீரோ-ஹீரோயின் சந்திப்பு.. மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனமான காதல் காட்சிகளில் நகர்கிறது! இதற்க்கு எங்கேயும் ஒட்டப்படாமல்
தன மகனைக் கொன்றவனின் மகனைக்கொல்ல அலையும் ஜெ.டி.சக்ரவர்த்தியும், அவரது மகனைக் விபத்தில் சாகடித்த இந்த்ரஜித்தும் (பிரசாந்த் நடித்த ஸ்டார் நியாபகம் இருக்கிறதா ) படத்தில் அலைகிறார்கள். வாரணம் ஆயிரம் போன்ற ஒரு இடைவேளை!
உடைந்து உருகி ரசிக்கும் அளவிற்கு காதல் காட்ச்சிகள் இல்லாவிட்டாலும் ரசிக்க வைக்கிறது சட்டை திறக்கையில் பட்டாம்பூச்சி பறப்பது, சாவு வீடா இருந்தாலும் பார்க்கமலே இளையராஜா இசை கேட்டு அவ இங்கதான் இருக்கானு சொல்றது (இதுக்கு பேர்தான் ஏழாவது அறிவுன்னு காதலிக்கிற நண்பன் ஒருத்தன் சொன்னான்! நான் இல்ல! ) இந்தமாதிரி அள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது காதல்.
ஜெ.டி சக்ரவர்த்தி! ஒரு பார்வைதான் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும்.அதுக்குள்ளையே சோகம்,வலி,குரோதம்,வஞ்சம் எல்லாமே இருக்கு! ஒரு சாயல்ல சிகப்புரோஜாக்கள் கமல் கதாபாத்திரம்! அதையே நினைவூட்டும் காட்ச்சிகளை தவிர்த்திருக்கலாம்!
சம்பந்தமில்லால் அலைந்துகொண்டிருந்த மூன்று கதைகள் ஒரு ஷாட்டில் இணைக்கப் பட்டுவிடுகிறது! விஷ்ணுவர்த்தனம்! மரணத்தில் பிரியும் உறவுகளால் உருவாகும் உறவுகளுக்குள் ஓடும் போராட்டம் தான் சர்வமும்!
நிறைய எதிர்கால உண்மைகள் நிகழ்காலத்தில் ஒளித்துவைக்கப்பட்ட காட்ச்சியமைப்புகள் ரசிக்க வைக்கின்றன.
காதல் உடல் மீதானதல்ல! உணர்வுப்பூர்வம் எனபதை வண்ணமயமாய் வரையத் தொடங்கி முடிக்காமல் விடப்படட்ட ஓவியம் சர்வம்!
O
சர்வம் – சில கேள்விகள்:
o திரிஷா நிமிடங்கள் அனைத்தும் கிளாசிக் வெண்மையில் தேவதைத்தனம்.. பாடல்களெல்லாம் அடர் நிறங்கள் கலந்த அமானுஷ்யமென இடைவேளைக்கு தயார்படுத்துகின்றதா?
o இந்திரஜித்தின் மகனாக வரும் சிறுவன் அணில் கோடு போட்ட கருப்பு மாருதி ஸ்விப்ட் கேட்பதும் அதே கலரில் அதே கார் ஆர்யா உபயோகிப்ப்பதையும் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்?
o ஆர்யா – கார்த்திக்-ஹிந்து , திரிஷா -சந்தியா-கிறிஸ்தவர் , இமான் எனப்படும் இஸ்லாமிய சிறுவன் இவர்களுக்க்கிடைஎயான இதயப் பூர்வமான உறவு என்பதில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது என்ன?
o இழப்புகளின் வலியும் வன்மமும் வழிந்தோடும் கதையில் எல்லோரும் மனைவி/மகள்/குழந்தையை இழந்தவர்கள் கதாபாத்திரங்கள் அதிகம்
o இழப்பின் வலி மட்டுமே வில்லனின் தவறுகளுக்கு காரணமெனில் வலியிலிருந்து அவனை மொத்தமாய் விலக்கி மனநோயாளியாக்கும் (மனுஷய புத்ரனின் பார்வையில் பாசிச) முடிவு குறித்த விவாதத்தில் நண்பர்கள் சொன்னது இதுக்கு பதிலா அவன கொன்றுக்கலாம். இரண்டுமே ஒன்னுதானே?
o ஆர்யா தற்க்கொலைக்காக நிற்கும்போது அருகில் வரும் காகம் இறந்துபோன திரிஷாவைக்குறிக்கிறதா?
Enakku pudichhuthu
ungalukku pidichirukku na kandippaa enakkum pidikkum. But unga alavukku observation power enakku illa.
i will watch it soon and share my thoughts.
Oh ippidi kuda ithuku review podalama?
சந்தியா-கிறிஸ்தவர் , இமான் எனப்படும் இஸ்லாமிய சிறுவன் – ithellam enga kandupidicheenga? Imaan nu enaku christian friend oruthan irukkan.
காகம் இறந்துபோன திரிஷாவைக்குறிக்கிறதா?
- Kaka va kevala paduthiteenga.
//சந்தியா-கிறிஸ்தவர் , இமான் எனப்படும் இஸ்லாமிய சிறுவன் – ithellam enga kandupidicheenga? Imaan nu enaku christian friend oruthan irukkan.
நான் கண்டுபிடிக்கலைங்க! படத்துலையே திரிஷவ கிறிஸ்தித்வராவும் அந்த பையன இஸ்லாமிய சிறுவனாவும் காட்டுற காட்சிகள் இருக்கு!
1.திரிஷா குதும்பத்தோட சர்ச் போறது
2. பையநொட அப்பா தொழுகை பண்றது