தமீழீழ தேசிய தலைவர் குறித்து வெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது ஏராளமான வதந்திகள் உண்மைகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. இந்த மாயக் கட்டுகளை உடைக்கக் கூடியவர் உடைக்கப் போகிறவர் அவரே என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் நாம்!
சரி இதில் தமிழ் வூடகங்களுக்கு என்ன அப்படி ஒரு பாசம்? என் தலைவர் இறந்துவிட்டதை சொல்வதை மட்டும் அப்படி என்ன வேகம்?என் சகோதர சகோதரி தினமும் நூற்றுக் கணக்கில் செத்துக் கொண்டிருக்கும்போது ஒரு புகைப்படத்தைக் காட்டப் பயந்த இந்த தொலைக்காட்சிகள் இன்று இலங்கை அரசு கொடுத்த ஒரு காணொளியை (Viedio) போட்டி போட்டு என் ஒளிபரப்பவேனும்? ஒரு மண்ணும் இல்லை! தலைவன் பிரிந்து விட்டதாய் ஒரு கூட்டமும் நம்முடன் இருப்பதை ஒரு கூட்டமும் போட்டு நாமே அடித்துக் கொண்டு இருக்கையில் மொத்த தமிழினத்தையும் துடைத்தெறிந்துவிட்டு உலகமெங்கும் பிச்சை எடுத்து தன சிங்களக் கூட்டத்தை வளப் படுத்தப் போகிறான் நீங்கள் தொடர்ந்து தலைவரைப் பற்றியே எழுதிக் கொண்டிருங்கள் அவர் யாருக்க்க்காகப் போராடுகிறாரோ அந்த தோழர்களை மறந்துவிட்டு. அடப் போங்கடா ராஜபக்ஷேக்களா.. போய் சகோதரன் எப்படி இருக்கான்னு பாருங்க தலைவன் புலி பதுங்குதல் முடிந்து பாயும்வரை கண்டதையும் எழுதி கண்ணீர் வடிக்காம,கண்ணீர் விட வைக்காம போய் வேலைய பாருங்க