தீபா’வலி’

வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி
புஸ்வாணம் கொளுத்தும்
சிறுவனின் கண்களில்
ஒளிர்கிறது இந்தியா.
o
ஒவ்வொரு வெடி ச‌த்தத்திற்கு பின்னும்
சித‌றி விழுகிற‌து
ஏதோ ஒரு சிவகாசி சிறுவ‌னின்
க‌ண்ணீர் துளி
o
கையில் வைத்து
வெடிக்கும் வீரர்களுக்கும்
கைகளை இழந்த மனிதர்களுக்கும்
ஒரே நாளில்தான்
தீபாவளி.
o
தீபாவளிக்கு
முந்தைய‌ நாள்
இறந்துபோன பாட்டியை நினைத்து
அழத்தான் வேண்டியிருக்கிறது.
இரண்டு நாள் கழித்து இறந்திருக்கலாம்

Leave a Comment