சில ரோஜாக்கள்


துரோகம் ஒளியும் கதவு
அக்டோபர் 21, 2009, 11:16 மு.பகல்
கோப்பு வகை: Poems

செருப்பைத் தொலைத்தபின்
எல்லோர்
கால்களையும் பார்த்தபடியே
வீடு வந்து சேர்ந்தேன்
o
காலைச்சுற்றும் நாய்களை
என்னால் பரிசளிக்க முடியாது
வருடலில் சுகம்காணும்
பூனைகளுமல்ல‌
உன் எண்ணங்களை எதிரொலிக்கும்
கிளியும் முடியாது
வளர்ப்பு பிராணியாய் இன்னும் மாறாத‌
உன் கருத்துகளில் மாறுபாடு கொண்ட‌
தனக்கான சுவர் படைக்கும் மனிதன் தருகிறேன்
புறக்கணிப்பாய் எனத் தெரிந்தும்.
o
கதவுக்குப் பின்னால்
துரோகம் ஒளியும் தெருக்களில்
ஊளையிட்டபடி இருக்கிறது தெரு நாய்
அறைகளில் ஊர்ந்து கொண்டிருக்கிறது
நெளி பாம்பென
மெளனம்
பேசுவதற்கு ஒன்றுமில்லாமல்
புன்னகைத்துக் கொள்கிறோம்
இரவில் இறந்து போனது
நட்பாய்க்கூட இருக்கலாம்
o
போன்சாய் மரங்களை
ஸ்கிரீன்சேவர் மீன்களை
ஃபிளாஷ் வெடிகளை
வரையப்பட்ட ஆறுகளை
பார்க்கும்
படைக்கும்
புதிய தலைமுறையொன்று
பின்னொரு நாளில்
கூகுளில் தேடும்
குடும்பத்தாரின் கான்டாக்ட் எண்ணை.
o


No Comments Yet இது வரை
மறுமொழியவும்



மறுமொழியவும்
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>