சில ரோஜாக்கள்


குறள் வழிக் கவிதைகள்-2-காதல் நெர ுப்பு
அக்டோபர் 22, 2009, 12:20 பிற்பகல்
கோப்பு வகை: Poems

நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

(குறள் எண் 1104)

தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் வந்தால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் எங்கிருந்துதான் பெற்றாளோ?

உன் ஊடல் விலகலின்
நெருப்பு காத்திருக்கிறது
நீ வந்து அணைக்க
நீ வந்து அணைக்க image0012
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் பனிமழை
குளிரிது குளிருது
ஒரே மருந்து
உன் நெருப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் பார்வை வெப்பம் பயந்தே
நெருங்குகிறேன் நான்
நெருக்கத்தில் குளிரும்
நெருப்பு நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் நெருப்பில் எனை எரி
என் நெருப்பில் நீ எரி
பிறக்கட்டும் புதிய பீனிக்ஸ் image0012
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் பார்வை வெப்பமின்றி
எரிகிறேன் நான் ஊடலில்
உன் தேக வெப்பம் பெற்று
குளிர்கிறேன் நான் கூடலில்


No Comments Yet இது வரை
மறுமொழியவும்



மறுமொழியவும்
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>