சில ரோஜாக்கள்


டெரகோட்டா சிற்பங்கள்
அக்டோபர் 23, 2009, 10:08 மு.பகல்
கோப்பு வகை: Poems

எனக்குப்பதில் தெரியாத
கேள்விகளைக் கேட்கும் குழந்தைகளை
அதட்டி அடக்கி விடுகிறேன்
தெரியாமல் போனது
ஒரு கண்டுபிடிப்பாய்க்கூட இருக்கலாம்
o
நான் விரும்பிய‌ ப‌டிப்பை
நீயாவ‌து ப‌டிக்க‌ வேண்டும்
என்றேன் ம‌க‌னிட‌ம்.
அவ‌னின்
“நான் விரும்பிய‌தை யார் ப‌டிப்பது”
கேள்விக்கு
என்னிட‌ம் ப‌திலில்லை
o
கொஞ்சம் களிமண் எடுத்துக்கொள்ளுங்கள்
கெட்டியாக பிசையவேண்டும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்
நீங்கள் விரும்பும் வடிவத்தின்
அச்சில் வார்க்கவும்
அடைக்கப்பட்ட அறையில்
புத்தகங்களை எரித்து
க‌ளிமண்ணைப் போட்டுவிடுங்கள்
டாக்டர் பொம்மையோ
கணினி வல்லுனரோ
விரும்பும் சிற்பங்கள் தயாராகும்.
களிமண்ணின் விருப்பத்தை
மட்டும் கேட்காதீர்கள்.
o
க‌ட‌வுளைப்ப‌ற்றி
கேள்வி மேல் கேள்வி கேட்கிறது
குழந்தை
எப்படி சொல்வ‌து என‌க்குத் தெரியாதென‌
“சாமி க‌ண்ணைக்குத்தும்” என‌ முடித்துவிட்டேன்


No Comments Yet இது வரை
மறுமொழியவும்



மறுமொழியவும்
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>