சில ரோஜாக்கள்


தேகமெல்லாம் காமம்.
நவம்பர் 9, 2009, 12:26 பிற்பகல்
கோப்பு வகை: Poems

மருதாணி விரல்களில் முத்தமிட
எத்தனிக்கையில்
எட்டி தள்ளுகிறாய் நீ
செவ்விதழ்களைக் கவனிக்காததை
கைகாட்டி சிரிக்கிறது காதல்.
o
தெருவெல்லாம் துடைத்த‌ ம‌ழை
என் ம‌ன‌தை குப்பையாக்கியிருக்கிற‌து
முழுதுமாய்
ந‌னைந்திருந்தாய் நீ
o
யாரும் பார்த்திராத‌ பார்வைக‌ளால்தான்
காத‌ல் சொன்னாய்
யாரும் சொல்லாத
ஸ்ப‌ரிச‌ங்களால் காம‌ம் த‌ந்தாய்
யாருக்கும் புரியாத‌ மெளன‌ங்க‌ளால்தான்
பிரிந்து சென்றாய்
சொல்ல‌ முடியாத‌ காத‌லுட‌ன்
சொல்ல‌ முடியாத‌ காம‌த‌துட‌ன்
சொல்ல‌ முடியாத‌ மெள‌ன‌ங்க‌ளால்
சொல்லாத‌ சில‌ வ‌ரிக‌ளை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
o
ந‌ள்ளிர‌வில் நின்றுவிட்ட‌ ம‌ழை
நினைவூட்டிப் போயிருக்கிற‌து
கொடும் ப‌க‌லில் பிரிந்து
சென்ற‌ உன்னை
o


No Comments Yet இது வரை
மறுமொழியவும்



மறுமொழியவும்
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>