O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! [...]
Posts Tagged ‘காமத்துப் பால் கவிதைகள்’
சினிமா 360 – சர்வம் – வன்மம் வண்ணமயம்
மே 17, 2009காமத்துப் பால் கவிதைகள்-11
ஜனவரி 23, 2009உனக்கு ஆடையாய்ப்
பிறக்க அலைகிறது பருத்தி
உனக்கு ஆடையே
பிறக்கக் கூடாது
என நானும்
காமத்துப் பால் கவிதைகள்-10
ஜனவரி 23, 2009குதித்துப் பறந்து
குதுகலமாய் செல்கிறது
நீ உதடு துடைத்தெறிந்த
ஒரு வெற்றுக் காகிதம்
காமத்துப் பால் கவிதைகள்-9
ஜனவரி 20, 2009என் தேநீர் கோப்பைகள்
சூடென உன்னிடம் கொடுக்கிறேன்
குழந்தைக்கான முத்தம் போல்
நீ மெதுவாய் ஊதுகையில்
உன்னையறியாமல் கலக்கும்
ஒரு துளி அமுத எச்சிலுக்காய்
காமத்துப் பால் கவிதைகள்-7
டிசம்பர் 2, 2008என் கோபங்களை
சோகங்களை
குடித்துவிடும்
சக்தி பெற்றிருக்கிறது
உன் உதடுகள்
காமத்துப் பால் கவிதைகள்-6
நவம்பர் 27, 2008உன் இறுகிய
இறுக்கிய முத்தம் பெற்ற
குளிரில் துடித்த
ஒரு நாளுக்காய்
காத்திருக்கிறேன் இன்றும்
..
காமத்துப் பால் கவிதைகள்-8
நவம்பர் 15, 2008எதிரெதிராய் போரிட்டு
இருவரும் வெல்லும்
வித்தியாச யுத்தத்தின்
முதல் வாள் வீச்சாய்
உந்தன் ஒரு
கண் ஓரப் பார்வை
..
காமத்துப் பால் கவிதைகள்-4
அக்டோபர் 22, 2008தனியாய் போரிட்டு
இருவரும் வெற்றி பெரும்
வித்தியாச போருக்கு
வித்திடும் தனிமையில்
நீ தரும் ஒரு துளி உதடு..
தொடரும்…
காமத்துப் பால் கவிதைகள்-3
அக்டோபர் 21, 2008உன் கடின வேலைகளுக்கு நடுவில்
உனக்கான இளைப்பாறுதலுக்கு என
என்ன கொடுத்து விட முடியும் நான்
இறுக்கமான ஒரு அணைப்பையும்
நெருக்கமான ஒரு முத்தத்தையும்
ஏராளமாய் அன்பையும் தவிர……
தொடரும்…
காமத்துப் பால் கவிதைகள்-2
அக்டோபர் 17, 2008உன்னை கொண்டு
தன்னை அழகாக்கிக்
கொள்கிறது ஆடைகள்..
என்னை தவிர எதுவும்
உபயோகப்படுத்திக் கொள்ளக்
கூடாது உன்னை
விரட்டி அடி
எனக்குப் போட்டியாய்
உன்னை அணைத்திருக்கும் ஆடைகளை..
தொடரும்…