எனக்குப் பொழுது போக வேண்டுமே
என்றேன்
நீயும் உன் சிலாங்குமென
தலையிலடித்துக் கொண்டாள்
இனிதான்
“ஜஸ்ட் ஃபார் டைம் பாஸ்”
பழக வேண்டும்
O
நெல்லை நிசன்தான்லே
மதுரை ஆமாடி மாப்ளே
கோவை ஆமாங்
இதுவரை எனக்குத் தெரிந்தது
எதிரில் நிற்கும்
எஸ் சாரை எதில்
சேர்ப்பது?
O
நகரத்து அவலம் குறித்து
எழுதிக் கொன்டிருந்தேன்
கீழே ஒரு நூறு ரூபாய் கிடந்தது.
கவிதை ஐந்து நிமிடம் கழித்து தொடர்ந்தது.
O
தற்கொலை செய்து கொள்வதற்காய்
மூன்று மணி நேரம்
மின்கம்பம் மேல்நின்றவன்
காப்பற்றப்பட்டான்
நாங்கள் வருத்தத்துடன் திரும்பி வந்தோம்
o
கன்னம் கிள்ளி
விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை
கண் பார்த்து சிரித்தாள்
பெண்ணொருத்தி
மஞ்சனத்தி மரம்மேல்
பொழிந்துகொண்டிருந்தது மழை
கீழே கிடந்த நூறுருபாய்
மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலேறினேன்
O
அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள்
எல்லா அறைக்கும் மின்விசிறி
ஏ.சி கார் [...]
Posts Tagged ‘சென்னை’
நகரத்தான் குறிப்புகள்
செப்டம்பர் 2, 2009ஈழம் இல்லாததைக் கொண்டாடுவோம்
ஜூன் 11, 2009இதையும் வெற்றிஎன்பார் அவர்
என் இடங்தனை என்னிடம் பிடிங்கி
மீட்டு விட்டதைக் கொக்கரிப்பார்
வெற்றியென விழாக் கொண்டாடுவார்
என் சகோதரன் முதுகில் மிதிப்பார்
மிதித்த குஷியில் குதிப்பார்
பலமுறை பெற்றதை மீண்டும் பெறும்வரை குதிப்பார்
எனக்குப் பிறந்தான் வயதொத்தவனும்
என்னைப் பெற்றான் வயதொத்தவனும்
போராட்டமென செத்துத் தொலைகையில்
எவன் எப்படிப் போனால் எனக்கென்ன?
கோவணம் முதல் கோமியம் வரை இலவசமாய்க் கிடைக்கையில்
நடிகனுக்கு ஓட்டுப் போட்டு
நடிகைக்கு கோவில் கட்டினால்
சாபல்யம் அடைந்துவிடப் போகிறது ஜென்மம்
பிரபாகரனுக்கு என்ன ஆனால் நமெக்கென்ன?
மே 21, 2009தமீழீழ தேசிய தலைவர் குறித்து வெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது ஏராளமான வதந்திகள் உண்மைகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. இந்த மாயக் கட்டுகளை உடைக்கக் கூடியவர் உடைக்கப் போகிறவர் அவரே என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் நாம்!
சரி இதில் தமிழ் வூடகங்களுக்கு என்ன அப்படி ஒரு பாசம்? என் தலைவர் இறந்துவிட்டதை சொல்வதை மட்டும் அப்படி என்ன வேகம்?என் சகோதர சகோதரி தினமும் நூற்றுக் கணக்கில் செத்துக் கொண்டிருக்கும்போது ஒரு புகைப்படத்தைக் காட்டப் பயந்த இந்த தொலைக்காட்சிகள் இன்று [...]
ஈழம்-ஒரு கருமம் புடிச்சவனும் சில வழக்கங்களும்!
மே 18, 2009தனி ஈழ முகமூடியொன்று
வழக்கம்போல்
மலை முகட்டின்
வாசலில் கிடந்தது
உண்ணாவிரத மேடைஒன்றில்
வழக்கம்போல்
கொஞ்சம் பிரியாணி
சிதறி இருந்தது
நெஞ்சடித்து அழுதவனின்
மார்புக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
வழக்கம்போல்
அடுத்த நாட்டின்
சோம பானம
சகோதரனுக்காய் சகோதரி
பெற்றவனொருவன்
வழக்கம்போல்
பதநீர் குடித்துக் கொண்டிருந்தான்
முன்னோர்கள் போலிருந்தவன்
முகமூடி கழற்றிவிட்டு
விக் அணிந்து
வழக்கம்போல்
நடிக்கப் போய்விட்டான்
வழக்கம்போல்
என் சகோதரனை குறிவுடைத்து
என் சகோதரி யோநி கிழித்து
வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருக்கிறது
மகிழும் ராஜ பக்ஷி
வழக்கம்போல் கண்ணீரைத் துடைத்தபடி
இதை எழுதிக் கொண்டிருக்கிறான்
கையாலாகாத ஒரு கருமம் புடிச்சவன்!
சினிமா 360 – சர்வம் – வன்மம் வண்ணமயம்
மே 17, 2009O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! [...]
ஆனந்த் Vs விகடன் 13.5.2009
மே 9, 2009ஆனந்தவிகடனில் சில வார்த்தைகளை வாசிக்கையில் எழுத்துகளில் பிறக்கும் சில வார்த்தைகள் என் மேனியெங்கும் அலைந்து திரிந்து பரவெளிகளில் சஞ்சரித்து சில நாட்களில் செத்துப் போகிறது. கட்டிப்போட்டு வளர்க்கும் சிறுமுயற்சி இந்த தொடர்.
O
தன்னை ஒளித்துக் கொண்டு
கிரிக்கெட் கிசுகிசு எழுதும்
ஒருவனைப்
படிப்பவர்களின் எண்ணிக்கை
செத்துப் போகும்
சகோதரர்கள் பற்றி எழுதும்
ஒருவனைப்
படிப்பவர் போல் இரு மடங்கு
Page No 12
O
கனவில் செய்த உதவியின்
பரிசு
கண்ணாடியில் பணம்
உண்ணா விரதத்திற்கு
போர் நிறுத்தம்
Page No 19
O
பத்திரிகைக் காரனுக்குத் தெரியும்
ஓட்டின் விலை
படித்தபின்
இன்னும் ஒரு
புதிய தேர்தல் பார்வையாளர்
Page No 21
O
வடக்கிருந்த பிசிராந்தையார்
நீட்சிகள்
காத்திருக்கின்றன
லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும்
கோப்பெருஞ் சோழர்கள்தான் [...]
தீமுக்காகும் ஆத்தீமூக்காக்கும் ஆளுக்கு பத்து குத்து
மே 5, 2009பசங்க.. குழந்தைகளுக்கான பெரியவர்கள் படம்னு யாரோ சொன்னாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு படம் பாக்கும்போதுதான் புரிஞ்சுது.
உள்குத்து 1:ஒரு சிறுவன். கடந்த அஞ்சு வருசமா கிளாஸ் லீடர். ஊர்ல யாருக்கும் பிடிக்கலயாம். போலீஸ்ட்ட போய் சொல்றாங்க. அவங்கள Arrest பண்ண எங்களுக்குத்தான் பிரச்சினைன்னு போலீஸ் சொல்லிடுது.
உள்குத்து 2:
‘கிட்டத்தட்ட வில்லன்’ சிறுவனோட பெயர் ‘ஜீவன் நித்யானந்தம் C.M’
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவனோட பெயர் ‘அன்புக்கரசு I.A.S’
உள்குத்து 3:
இரண்டு பசங்க.பக்கத்து பக்கத்து வீடு. [...]
முத்துக் குமரனுக்காய் காறி உமிழுங்கள்-முத்துக்குமார புராணம்-சில பதில்கள்..
பெப்ரவரி 2, 2009இந்த பதிலைப் படிக்கும் முன்னர் என் இந்த பதிவில் நண்பர்களின் கேள்விகளைப் படித்துவிட்டு வாருங்கள்
#################################################
தன் கருத்துகளை மென்மையாகவும் வன்மையாகவும் தெரிவித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி… ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..தமிழன் சாகக்கூடாது எனத்தான் நாம் போராடுகிறோம்.. அவன் இலங்கையில் இறந்தாலும் இங்கே சாஸ்திரி பவனில் இறந்தாலும் தமிழனின் இறப்பு கொடுமைதான்.. முத்துக்குமரனை நானும் தியாகி என சொல்லிச் செல்வதால் என்ன மாற்றம் வருமென நினைக்கிறீர்? இதைபோல் ஆயிரமாயிரம் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறோம்..இது போன்றதொரு உயிர் தியாகத்தால் என் [...]
முத்துக் குமார புராணம்
ஜனவரி 30, 2009மீண்டும் ஒரு முட்டாள் முளைத்திருக்கிறான்
இந்தமுறை அவனது பெயர் முத்துக்குமரன்
மூன்று தலைமுறையாய்
இவர்கள் தீர்க்கததொரு தவறை
தன் தலைமுறையில்
மட்டும் தீர்த்துவிடுவார்
என தீக்குளித்திருக்கிறான்
இவர் தீர்க்கத்தெரியாதவரோ
தீர்க்க முடியாதவரோ இல்லை தமிழனே
தீர்க்க விரும்பாதவர்
அடுத்த தேர்தலில் ஓட்டுவாங்க அவர்தம் மரணம் தேவை
அடுத்த செய்தியில் நெஞ்சுபுடைக்கப் பேச அவர்தம் தோல்வி தேவை
பேரன்களில் பத்திரிகையில் முதல் பக்கம் போட அவர்தம் ரத்தம் தெறித்த புகைப்படம் தேவை
முதல் பக்கம் புகைப்பட வரலாறு போட்டு
மூன்று நிமிடம் செய்தி வாசித்து
முன்னூறு ரூபாய் கட்ச்சிநிதி கொடுத்து புகைப்படம் எடுத்து
கிளம்பிச் செல்கையில் அவர்கள் மறந்து
அடுத்த முக்கிய வேலையை [...]