கோப்பு வகை: Review | குறிச்சொற்கள்: Anand, angel, எண்ணங்கள், காதல், காமத்துப் பால் கவிதைகள், சென்னை, தேவதை, cinema 360, cinima, India, kaamam, love, tamil, tamil cinema, theavthai, vimarsanam

O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா ![]()
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! சம்பந்தமில்லாத ஹீரோ-ஹீரோயின் சந்திப்பு.. மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனமான காதல் காட்சிகளில் நகர்கிறது! இதற்க்கு எங்கேயும் ஒட்டப்படாமல்
தன மகனைக் கொன்றவனின் மகனைக்கொல்ல அலையும் ஜெ.டி.சக்ரவர்த்தியும், அவரது மகனைக் விபத்தில் சாகடித்த இந்த்ரஜித்தும் (பிரசாந்த் நடித்த ஸ்டார் நியாபகம் இருக்கிறதா ) படத்தில் அலைகிறார்கள். வாரணம் ஆயிரம் போன்ற ஒரு இடைவேளை!
உடைந்து உருகி ரசிக்கும் அளவிற்கு காதல் காட்ச்சிகள் இல்லாவிட்டாலும் ரசிக்க வைக்கிறது சட்டை திறக்கையில் பட்டாம்பூச்சி பறப்பது, சாவு வீடா இருந்தாலும் பார்க்கமலே இளையராஜா இசை கேட்டு அவ இங்கதான் இருக்கானு சொல்றது (இதுக்கு பேர்தான் ஏழாவது அறிவுன்னு காதலிக்கிற நண்பன் ஒருத்தன் சொன்னான்! நான் இல்ல! ) இந்தமாதிரி அள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது காதல்.
ஜெ.டி சக்ரவர்த்தி! ஒரு பார்வைதான் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும்.அதுக்குள்ளையே சோகம்,வலி,குரோதம்,வஞ்சம் எல்லாமே இருக்கு! ஒரு சாயல்ல சிகப்புரோஜாக்கள் கமல் கதாபாத்திரம்! அதையே நினைவூட்டும் காட்ச்சிகளை தவிர்த்திருக்கலாம்!
சம்பந்தமில்லால் அலைந்துகொண்டிருந்த மூன்று கதைகள் ஒரு ஷாட்டில் இணைக்கப் பட்டுவிடுகிறது! விஷ்ணுவர்த்தனம்! மரணத்தில் பிரியும் உறவுகளால் உருவாகும் உறவுகளுக்குள் ஓடும் போராட்டம் தான் சர்வமும்!
நிறைய எதிர்கால உண்மைகள் நிகழ்காலத்தில் ஒளித்துவைக்கப்பட்ட காட்ச்சியமைப்புகள் ரசிக்க வைக்கின்றன.
காதல் உடல் மீதானதல்ல! உணர்வுப்பூர்வம் எனபதை வண்ணமயமாய் வரையத் தொடங்கி முடிக்காமல் விடப்படட்ட ஓவியம் சர்வம்!
O
சர்வம் – சில கேள்விகள்:
o திரிஷா நிமிடங்கள் அனைத்தும் கிளாசிக் வெண்மையில் தேவதைத்தனம்.. பாடல்களெல்லாம் அடர் நிறங்கள் கலந்த அமானுஷ்யமென இடைவேளைக்கு தயார்படுத்துகின்றதா?
o இந்திரஜித்தின் மகனாக வரும் சிறுவன் அணில் கோடு போட்ட கருப்பு மாருதி ஸ்விப்ட் கேட்பதும் அதே கலரில் அதே கார் ஆர்யா உபயோகிப்ப்பதையும் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்?
o ஆர்யா – கார்த்திக்-ஹிந்து , திரிஷா -சந்தியா-கிறிஸ்தவர் , இமான் எனப்படும் இஸ்லாமிய சிறுவன் இவர்களுக்க்கிடைஎயான இதயப் பூர்வமான உறவு என்பதில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது என்ன?
o இழப்புகளின் வலியும் வன்மமும் வழிந்தோடும் கதையில் எல்லோரும் மனைவி/மகள்/குழந்தையை இழந்தவர்கள் கதாபாத்திரங்கள் அதிகம்
o இழப்பின் வலி மட்டுமே வில்லனின் தவறுகளுக்கு காரணமெனில் வலியிலிருந்து அவனை மொத்தமாய் விலக்கி மனநோயாளியாக்கும் (மனுஷய புத்ரனின் பார்வையில் பாசிச) முடிவு குறித்த விவாதத்தில் நண்பர்கள் சொன்னது இதுக்கு பதிலா அவன கொன்றுக்கலாம். இரண்டுமே ஒன்னுதானே?
o ஆர்யா தற்க்கொலைக்காக நிற்கும்போது அருகில் வரும் காகம் இறந்துபோன திரிஷாவைக்குறிக்கிறதா?
கோப்பு வகை: Review | குறிச்சொற்கள்: Anand, எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், சென்னை, cinema 360, cinima, India, tamil, tamil cinema, vimarsanam
பசங்க.. குழந்தைகளுக்கான பெரியவர்கள் படம்னு யாரோ சொன்னாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு படம் பாக்கும்போதுதான் புரிஞ்சுது.
உள்குத்து 1:ஒரு சிறுவன். கடந்த அஞ்சு வருசமா கிளாஸ் லீடர். ஊர்ல யாருக்கும் பிடிக்கலயாம். போலீஸ்ட்ட போய் சொல்றாங்க. அவங்கள Arrest பண்ண எங்களுக்குத்தான் பிரச்சினைன்னு போலீஸ் சொல்லிடுது.
உள்குத்து 2:
‘கிட்டத்தட்ட வில்லன்’ சிறுவனோட பெயர் ‘ஜீவன் நித்யானந்தம் C.M’
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவனோட பெயர் ‘அன்புக்கரசு I.A.S’
உள்குத்து 3:
இரண்டு பசங்க.பக்கத்து பக்கத்து வீடு. ஒருத்தனோட தங்கச்சிய இன்னொருத்தன் அடிச்சிடுறான். தட்டிக் கேட்கவேண்டிய சித்தப்பன கேட்டா சின்னப் பசங்க விவகாரத்துல நான் தலையிட முடியாதுன்னு ஒதுங்கிகிறான். காரணம் அடிச்சவனோட அக்கா சித்தப்பனோட காதலி.
உள்குத்து 4:
ஒரு பையனோட அப்பாவ இன்னொரு பையன் கிண்டல் பண்றான். அவங்க ரெண்டு பெரும் அடிச்சுக்க ஆரம்பிச்ச்சு ஆதரவு,எதிர் கோஷ்ட்டினு ஸ்கூல் மொத்தமும் அடிச்சுக்குது. எல்லோரும் தேசிய கீதம் கேட்டா மட்டும் எழுந்து நிக்கிறாங்க.
தலைமைஆசிரியர் வந்து எல்லாரையும் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன்னு சொல்லிகிட்டே தோப்புகரணம் போடா சொல்றாரு. (இதோட உண்மை அர்த்தத்த விளக்குற வசனம் படத்துல இருக்கு)
உள்குத்து 5:
“கிட்டத்தட்ட ஹீரோ” சிறுவனை லீடர் பதவியில இருந்து இறக்க கொஞ்சம் சாக்பீஸ அவன் பையில “வில்லன் குரூப்” பசங்களே போட்டு மாட்டி விட முயற்சி பண்றாங்க.
உள்குத்து 6:
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவன் வேற ஸ்கூல்ல சேர்ந்தவன். அவன் மாணவர் லீடருக்கான தேர்ல்தல்ல நிக்கும்போது யாருமே ஆதரிக்கல. அந்த மாணவனுக்கு நெருக்கமான ஒரு பெண் தன் சகாக்களிடம் பரிந்துரை செய்து அவனை ஜெயிக்க வைக்கிறாள்.
உள்குத்து 7:
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவனுக்கு கைத்தட்டல் ஊக்கம் கொடுக்கிறது. ‘கிட்டத்தட்ட வில்லன்’ சிறுவன் பேனா உள்ளிட்ட பரிசுகளில் மயங்குகிறான்.
உள்குத்து 8:
ஹீரோ சிறுவன் அறிமுகத்தில் வெள்ளை நிறச் சட்டையும் வருவரை நிற்கும் சிகப்பு நிற “டை” உடன் வருகிறான்
உள்குத்து 9:
எல்லோரும் திருந்தி ஒன்று சேரும் இடத்தில் கடைக்குட்டித் தம்பி மறுபடியும் தொடங்கி வைக்கிறான்.
உள்குத்து 10:
அந்த கிளாஸ் லீடர் அமைதியா இருந்தாலும் அவன தப்பு செய்ய சொல்லி தூண்டுறது வலது பக்கத்துல இருக்கிற ஒரு பையன். அவன் கூட எப்பவும் குண்டா ஒரு பையனும் ஒல்லியா கண்ணாடி போட்ட ஒரு பையனும் இருக்காங்க
- இந்த உள்குத்துகளின் உண்மையான அர்த்தம் என்னன்னு என்கிட்டே கேட்காதீங்க. ரத்தத்தின்ரத்தங்களிடமும்,உடன்பிறப்புகளிடமும் அடிவாங்கும் சக்தி எனக்கு இல்லை
- இன்னும் பல உள்குத்துகள் படம் பார்க்கும் பொழுது கவனிச்சேன். இப்ப மறந்துடுச்சு.
- இந்த உள்குத்துகளெல்லாம் பாண்டிராஜ் plan பண்ணி வச்சாரு எத்தன தானாக அமைஞ்சதுன்னு தெரியல
கோப்பு வகை: Review | குறிச்சொற்கள்: Anand, cinema 360, cinima, tamil, tamil cinema, vimarsanam
அப்பாவ ஹீரோவா பாத்து வளந்த ஒரு மகனோட குரல்..வெறும் வாழ்கை வரலாற போக வேண்டிய படம் கௌதமத் தனத்தால நல்லாவே போகுது..
ஒரு பையன அப்பா கைல தூக்குறதுல இருந்து அதே அப்பாக்கு அந்த பையன் பிண்டம் வைக்கிற வரைக்கும் நடக்கும் நிகழ்வுகள தொகுக்கிறதுல தன்னோட
புத்திசாலித் தனத்த காட்டி இருக்கிறாரு கௌதம்.
ஒரு வாழ்கைய சொல்ற படத்த ட்ரை பண்ணி இடையில தன்னோட அப்பா இறந்துட அவருக்கு அஞ்சலி செலுத்தனும்கிறதுக்காக தவமாய் தவமிருந்து சே த்துருக்காரு..
அப்புறம் காணாம போன கொழந்தைய டெல்லி புல்லா நடந்தே சுத்திவந்து கண்டுபிடிச்சி, பரிதாபமா நடந்துவர (வெறும் நாலு பேரு,ரெண்டு கத்தி?!?!) வில்லன்கள மோதி ஜெயிக்கிறாரு சூர்யா .. தலைவரோட “பிரியா”படத்துல பாத்த நியாபகமா கெளதம்?
கலக்கல்ஸ்:
1. அப்பா இறந்தது கேக்குற மகனுக்கு பின்னாடி மெதுவா இருட்டு அதிகமாகுறது, இறந்து போனவரு நடந்து வர பின்பக்கம் ஒளி வட்டம் மாதிரி வெண்மை, காதல் வெற்றி காலத்துல பாக்குறதெல்லாம் பசுமைனு வர்ணம் ஆயிரம் ஆகுனதுக்கு ஒரு தடவ கை தட்டலாம்
2. போதை பழக்கத்தால ஒருத்தனோட இழப்புகள உறுத்தாம உள்ள நுழைச்சது
3.கமர்ஷியல் தனத்தையும் பாசத்தையும் சரியான அளவுல கலந்ததுக்கு,
4. 1980’s டிரெஸ்,வாகனங்கள், ஸ்பென்செர் கூட கொண்டுவர ட்ரை பண்ணதுக்கு
5. அனல் மேலே பனித்துளிக்கு சம்பந்தமில்லாத விஷுவலா அழகா காட்டி இருக்கிறது..
6. வசனங்களால வாழ்க்கைய சொல்ல முயற்சி பண்ணது..
7. அப்பா சூர்யாவோட வயசான காலத்து காதல அழகா சொன்னது
சொதப்பல்ஸ்:
1. ஆயிரம் யானை சூழப் பிறந்தவன்னு அவர் சொல்ல நினச்சது மகன… அப்புறம் அப்பாவ சொல்லனும்கிறதுக்காக சிம்ரன விட்டு லாஸ்ட் ல ஒரு சிறுகுறிப்பு..
2. சிம்ரனுக்கு டூயட் வேணும்கிரதுக்காக அப்பாவோட பிளாஷ் பேக் னு சமாளிபிய் கேஷன் கள தவிர்த்திருக்கலாம்..
3. சூர்யாவோட six-pack வேஸ்ட் பண்ணது..
4. ஏற்கனவே பல படங்கள்ல சிவாஜி பண்ண அதே “அப்பா” ஸ்டைல் ?! ?!
5. அப்பா பாசத்த பற்றிய தமிழ் படம்கிறதுக்காகவாது ஒரு தடவையாவது அப்பா னு கூப்ட வச்சிருக்கலாம் .. ஒரே “Dady” மயம்…
மொத்தத்தில்:
ஒரு அப்பாவும் மகனும் சேர்ந்திருக்கும் எல்லா நிமிஷத்தின் ஒரு Colorful பதிவு…
தவமாய் தவமிருந்து + அஞ்சாதே + வர்ணம் ஆயிரம் + வாழ்வின் ரணம் ஆயிரம் + கௌதமின் (ஆங்கிலம்+அமெரிக்கா) = வாரணம் ஆயிரம்
recommendation ? : ஒரு தடவ பாக்கலாம்..
Mark ? : 5.4 / 10