கோப்பு வகை: Poems | குறிச்சொற்கள்: Anand, எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், காதல், சென்னை, லதாமகன், India, Poem, poetry, silarojakkal, tamil, tamil cinema
எனக்குப் பொழுது போக வேண்டுமே
என்றேன்
நீயும் உன் சிலாங்குமென
தலையிலடித்துக் கொண்டாள்
இனிதான்
“ஜஸ்ட் ஃபார் டைம் பாஸ்”
பழக வேண்டும்
O
நெல்லை நிசன்தான்லே
மதுரை ஆமாடி மாப்ளே
கோவை ஆமாங்
இதுவரை எனக்குத் தெரிந்தது
எதிரில் நிற்கும்
எஸ் சாரை எதில்
சேர்ப்பது?
O
நகரத்து அவலம் குறித்து
எழுதிக் கொன்டிருந்தேன்
கீழே ஒரு நூறு ரூபாய் கிடந்தது.
கவிதை ஐந்து நிமிடம் கழித்து தொடர்ந்தது.
O
தற்கொலை செய்து கொள்வதற்காய்
மூன்று மணி நேரம்
மின்கம்பம் மேல்நின்றவன்
காப்பற்றப்பட்டான்
நாங்கள் வருத்தத்துடன் திரும்பி வந்தோம்
o
கன்னம் கிள்ளி
விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை
கண் பார்த்து சிரித்தாள்
பெண்ணொருத்தி
மஞ்சனத்தி மரம்மேல்
பொழிந்துகொண்டிருந்தது மழை
கீழே கிடந்த நூறுருபாய்
மட்டும் எடுத்துக்கொண்டு ரயிலேறினேன்
O
அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள்
எல்லா அறைக்கும் மின்விசிறி
ஏ.சி கார் பார்க்கிங்
இன்னும் என்னவெல்லாமோ…
பின் கலைத்துவிட்டு
குடிசைக்குள் உணவருந்தப் போனார்கள்.
OoO
நன்றி உயிரோசை
கோப்பு வகை: Poems, Review | குறிச்சொற்கள்: Anand, ஈழம், எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், சென்னை, முத்துக்குமார், India, Kavithai, poetry, tamil, vimarsanam
இதையும் வெற்றிஎன்பார் அவர்
என் இடங்தனை என்னிடம் பிடிங்கி
மீட்டு விட்டதைக் கொக்கரிப்பார்
வெற்றியென விழாக் கொண்டாடுவார்
என் சகோதரன் முதுகில் மிதிப்பார்
மிதித்த குஷியில் குதிப்பார்
பலமுறை பெற்றதை மீண்டும் பெறும்வரை குதிப்பார்
எனக்குப் பிறந்தான் வயதொத்தவனும்
என்னைப் பெற்றான் வயதொத்தவனும்
போராட்டமென செத்துத் தொலைகையில்
எவன் எப்படிப் போனால் எனக்கென்ன?
கோவணம் முதல் கோமியம் வரை இலவசமாய்க் கிடைக்கையில்
நடிகனுக்கு ஓட்டுப் போட்டு
நடிகைக்கு கோவில் கட்டினால்
சாபல்யம் அடைந்துவிடப் போகிறது ஜென்மம்
கோப்பு வகை: Poems | குறிச்சொற்கள்: Anand, ஈழம், எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், சென்னை, முத்துக்குமார், India, Poem, poetry, tamil, vimarsanam
தனி ஈழ முகமூடியொன்று
வழக்கம்போல்
மலை முகட்டின்
வாசலில் கிடந்தது
உண்ணாவிரத மேடைஒன்றில்
வழக்கம்போல்
கொஞ்சம் பிரியாணி
சிதறி இருந்தது
நெஞ்சடித்து அழுதவனின்
மார்புக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
வழக்கம்போல்
அடுத்த நாட்டின்
சோம பானம
சகோதரனுக்காய் சகோதரி
பெற்றவனொருவன்
வழக்கம்போல்
பதநீர் குடித்துக் கொண்டிருந்தான்
முன்னோர்கள் போலிருந்தவன்
முகமூடி கழற்றிவிட்டு
விக் அணிந்து
வழக்கம்போல்
நடிக்கப் போய்விட்டான்
வழக்கம்போல்
என் சகோதரனை குறிவுடைத்து
என் சகோதரி யோநி கிழித்து
வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருக்கிறது
மகிழும் ராஜ பக்ஷி
வழக்கம்போல் கண்ணீரைத் துடைத்தபடி
இதை எழுதிக் கொண்டிருக்கிறான்
கையாலாகாத ஒரு கருமம் புடிச்சவன்!
கோப்பு வகை: Review | குறிச்சொற்கள்: Anand, angel, எண்ணங்கள், காதல், காமத்துப் பால் கவிதைகள், சென்னை, தேவதை, cinema 360, cinima, India, kaamam, love, tamil, tamil cinema, theavthai, vimarsanam

O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா ![]()
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! சம்பந்தமில்லாத ஹீரோ-ஹீரோயின் சந்திப்பு.. மிகைப்படுத்தப்பட்ட சினிமாத்தனமான காதல் காட்சிகளில் நகர்கிறது! இதற்க்கு எங்கேயும் ஒட்டப்படாமல்
தன மகனைக் கொன்றவனின் மகனைக்கொல்ல அலையும் ஜெ.டி.சக்ரவர்த்தியும், அவரது மகனைக் விபத்தில் சாகடித்த இந்த்ரஜித்தும் (பிரசாந்த் நடித்த ஸ்டார் நியாபகம் இருக்கிறதா ) படத்தில் அலைகிறார்கள். வாரணம் ஆயிரம் போன்ற ஒரு இடைவேளை!
உடைந்து உருகி ரசிக்கும் அளவிற்கு காதல் காட்ச்சிகள் இல்லாவிட்டாலும் ரசிக்க வைக்கிறது சட்டை திறக்கையில் பட்டாம்பூச்சி பறப்பது, சாவு வீடா இருந்தாலும் பார்க்கமலே இளையராஜா இசை கேட்டு அவ இங்கதான் இருக்கானு சொல்றது (இதுக்கு பேர்தான் ஏழாவது அறிவுன்னு காதலிக்கிற நண்பன் ஒருத்தன் சொன்னான்! நான் இல்ல! ) இந்தமாதிரி அள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது காதல்.
ஜெ.டி சக்ரவர்த்தி! ஒரு பார்வைதான் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும்.அதுக்குள்ளையே சோகம்,வலி,குரோதம்,வஞ்சம் எல்லாமே இருக்கு! ஒரு சாயல்ல சிகப்புரோஜாக்கள் கமல் கதாபாத்திரம்! அதையே நினைவூட்டும் காட்ச்சிகளை தவிர்த்திருக்கலாம்!
சம்பந்தமில்லால் அலைந்துகொண்டிருந்த மூன்று கதைகள் ஒரு ஷாட்டில் இணைக்கப் பட்டுவிடுகிறது! விஷ்ணுவர்த்தனம்! மரணத்தில் பிரியும் உறவுகளால் உருவாகும் உறவுகளுக்குள் ஓடும் போராட்டம் தான் சர்வமும்!
நிறைய எதிர்கால உண்மைகள் நிகழ்காலத்தில் ஒளித்துவைக்கப்பட்ட காட்ச்சியமைப்புகள் ரசிக்க வைக்கின்றன.
காதல் உடல் மீதானதல்ல! உணர்வுப்பூர்வம் எனபதை வண்ணமயமாய் வரையத் தொடங்கி முடிக்காமல் விடப்படட்ட ஓவியம் சர்வம்!
O
சர்வம் – சில கேள்விகள்:
o திரிஷா நிமிடங்கள் அனைத்தும் கிளாசிக் வெண்மையில் தேவதைத்தனம்.. பாடல்களெல்லாம் அடர் நிறங்கள் கலந்த அமானுஷ்யமென இடைவேளைக்கு தயார்படுத்துகின்றதா?
o இந்திரஜித்தின் மகனாக வரும் சிறுவன் அணில் கோடு போட்ட கருப்பு மாருதி ஸ்விப்ட் கேட்பதும் அதே கலரில் அதே கார் ஆர்யா உபயோகிப்ப்பதையும் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்?
o ஆர்யா – கார்த்திக்-ஹிந்து , திரிஷா -சந்தியா-கிறிஸ்தவர் , இமான் எனப்படும் இஸ்லாமிய சிறுவன் இவர்களுக்க்கிடைஎயான இதயப் பூர்வமான உறவு என்பதில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பது என்ன?
o இழப்புகளின் வலியும் வன்மமும் வழிந்தோடும் கதையில் எல்லோரும் மனைவி/மகள்/குழந்தையை இழந்தவர்கள் கதாபாத்திரங்கள் அதிகம்
o இழப்பின் வலி மட்டுமே வில்லனின் தவறுகளுக்கு காரணமெனில் வலியிலிருந்து அவனை மொத்தமாய் விலக்கி மனநோயாளியாக்கும் (மனுஷய புத்ரனின் பார்வையில் பாசிச) முடிவு குறித்த விவாதத்தில் நண்பர்கள் சொன்னது இதுக்கு பதிலா அவன கொன்றுக்கலாம். இரண்டுமே ஒன்னுதானே?
o ஆர்யா தற்க்கொலைக்காக நிற்கும்போது அருகில் வரும் காகம் இறந்துபோன திரிஷாவைக்குறிக்கிறதா?
கோப்பு வகை: Poems | குறிச்சொற்கள்: Anand, AnandaVikatan, ஈழம், எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், காதல், சென்னை, முத்துக்குமார், cinima, India, tamil, tamil cinema, vimarsanam
ஆனந்தவிகடனில் சில வார்த்தைகளை வாசிக்கையில் எழுத்துகளில் பிறக்கும் சில வார்த்தைகள் என் மேனியெங்கும் அலைந்து திரிந்து பரவெளிகளில் சஞ்சரித்து சில நாட்களில் செத்துப் போகிறது. கட்டிப்போட்டு வளர்க்கும் சிறுமுயற்சி இந்த தொடர்.
O
தன்னை ஒளித்துக் கொண்டு
கிரிக்கெட் கிசுகிசு எழுதும்
ஒருவனைப்
படிப்பவர்களின் எண்ணிக்கை
செத்துப் போகும்
சகோதரர்கள் பற்றி எழுதும்
ஒருவனைப்
படிப்பவர் போல் இரு மடங்கு
Page No 12
O
கனவில் செய்த உதவியின்
பரிசு
கண்ணாடியில் பணம்
உண்ணா விரதத்திற்கு
போர் நிறுத்தம்
Page No 19
O
பத்திரிகைக் காரனுக்குத் தெரியும்
ஓட்டின் விலை
படித்தபின்
இன்னும் ஒரு
புதிய தேர்தல் பார்வையாளர்
Page No 21
O
வடக்கிருந்த பிசிராந்தையார்
நீட்சிகள்
காத்திருக்கின்றன
லண்டனிலும் ஆஸ்திரேலியாவிலும்
கோப்பெருஞ் சோழர்கள்தான் பாவம்
தேர்தல் நேரத்தில் எப்படி?
Page No 21
O
இருவர் எறிந்த ஷூக்களைப்போல்
இவர்களுக்குப் பயமில்லை
எங்கோ எறியப்படும்
ஷெல்கள் !
Page No 35
O
தீவிரவாதி குறித்த
குழந்தையின் புகைப்படத்தில்
T.V யில் ஒருவன்
தொப்பியும் தாடியுமாய் இருந்தான்
அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டு
சிகப்புத்துண்டால்
முகம் துடைத்துக் கொண்டான் அவன்!
Page No 56
O
நாய் செத்தது
படித்த ஒரு அரசன்
நாய்களைக் காக்கப் பணித்தானாம்!
ரத்தத்தில் எழுதிய எங்கள் பிணங்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது
யார் இங்கே?
Page No 58
O
எல்லாத் தலைவர்களும்
எல்லத்த் தளபதிகளும்
எல்லாப் புரட்ச்சிகளும்
நடித்தாயிற்று எங்களைக்
காப்பதாய்
நீயும் கலந்துகொள்
கேவலம் நடிப்புதானே!
Page No 59
O
கல்யாணத்துக்கு ஆற்றில் இறங்கும்
கடவுளின்
அவதாரத்திற்குக் காத்திருக்கிறோம்
கடலில் இறங்கி எங்களைக் கரை சேர்க்க
பானைக்கு கோபித்து திரும்புதல்
போல் மீண்டும் திரும்பிவிடாதே
மஞ்சள் இல்லாத சிகப்புத்
தோள் துண்டிற்கு சினந்து
O
நகங்களைப் புடுங்கிக்கொண்டு
சமாதானத்திற்கு வரவேண்டுமாம்
பற்களை உடைத்துக் கொண்டு
சமாதானத்திற்கு வர வேண்டுமாம்
மயிர்களையும் சிரைத்துவிட்டு
சமாதத்திற்கு அழைக்கிறது
கையில் கத்தி வைத்திருக்கும்
ஒரு கிழட்டுச் சிங்கம்
Page No 101
O
ஓநாய்கள் சைவாமாகாது
ஒத்துக் கொண்டது
உறுதிமொழிகளுக்கு நடுவில் ஒரு
அரசியல்வாதி
Page No 103
O
தொடரும்
கோப்பு வகை: Review | குறிச்சொற்கள்: Anand, எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், சென்னை, cinema 360, cinima, India, tamil, tamil cinema, vimarsanam
பசங்க.. குழந்தைகளுக்கான பெரியவர்கள் படம்னு யாரோ சொன்னாங்க. அதுக்கு என்ன அர்த்தம்னு படம் பாக்கும்போதுதான் புரிஞ்சுது.
உள்குத்து 1:ஒரு சிறுவன். கடந்த அஞ்சு வருசமா கிளாஸ் லீடர். ஊர்ல யாருக்கும் பிடிக்கலயாம். போலீஸ்ட்ட போய் சொல்றாங்க. அவங்கள Arrest பண்ண எங்களுக்குத்தான் பிரச்சினைன்னு போலீஸ் சொல்லிடுது.
உள்குத்து 2:
‘கிட்டத்தட்ட வில்லன்’ சிறுவனோட பெயர் ‘ஜீவன் நித்யானந்தம் C.M’
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவனோட பெயர் ‘அன்புக்கரசு I.A.S’
உள்குத்து 3:
இரண்டு பசங்க.பக்கத்து பக்கத்து வீடு. ஒருத்தனோட தங்கச்சிய இன்னொருத்தன் அடிச்சிடுறான். தட்டிக் கேட்கவேண்டிய சித்தப்பன கேட்டா சின்னப் பசங்க விவகாரத்துல நான் தலையிட முடியாதுன்னு ஒதுங்கிகிறான். காரணம் அடிச்சவனோட அக்கா சித்தப்பனோட காதலி.
உள்குத்து 4:
ஒரு பையனோட அப்பாவ இன்னொரு பையன் கிண்டல் பண்றான். அவங்க ரெண்டு பெரும் அடிச்சுக்க ஆரம்பிச்ச்சு ஆதரவு,எதிர் கோஷ்ட்டினு ஸ்கூல் மொத்தமும் அடிச்சுக்குது. எல்லோரும் தேசிய கீதம் கேட்டா மட்டும் எழுந்து நிக்கிறாங்க.
தலைமைஆசிரியர் வந்து எல்லாரையும் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டேன்னு சொல்லிகிட்டே தோப்புகரணம் போடா சொல்றாரு. (இதோட உண்மை அர்த்தத்த விளக்குற வசனம் படத்துல இருக்கு)
உள்குத்து 5:
“கிட்டத்தட்ட ஹீரோ” சிறுவனை லீடர் பதவியில இருந்து இறக்க கொஞ்சம் சாக்பீஸ அவன் பையில “வில்லன் குரூப்” பசங்களே போட்டு மாட்டி விட முயற்சி பண்றாங்க.
உள்குத்து 6:
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவன் வேற ஸ்கூல்ல சேர்ந்தவன். அவன் மாணவர் லீடருக்கான தேர்ல்தல்ல நிக்கும்போது யாருமே ஆதரிக்கல. அந்த மாணவனுக்கு நெருக்கமான ஒரு பெண் தன் சகாக்களிடம் பரிந்துரை செய்து அவனை ஜெயிக்க வைக்கிறாள்.
உள்குத்து 7:
‘கிட்டத்தட்ட ஹீரோ’ சிறுவனுக்கு கைத்தட்டல் ஊக்கம் கொடுக்கிறது. ‘கிட்டத்தட்ட வில்லன்’ சிறுவன் பேனா உள்ளிட்ட பரிசுகளில் மயங்குகிறான்.
உள்குத்து 8:
ஹீரோ சிறுவன் அறிமுகத்தில் வெள்ளை நிறச் சட்டையும் வருவரை நிற்கும் சிகப்பு நிற “டை” உடன் வருகிறான்
உள்குத்து 9:
எல்லோரும் திருந்தி ஒன்று சேரும் இடத்தில் கடைக்குட்டித் தம்பி மறுபடியும் தொடங்கி வைக்கிறான்.
உள்குத்து 10:
அந்த கிளாஸ் லீடர் அமைதியா இருந்தாலும் அவன தப்பு செய்ய சொல்லி தூண்டுறது வலது பக்கத்துல இருக்கிற ஒரு பையன். அவன் கூட எப்பவும் குண்டா ஒரு பையனும் ஒல்லியா கண்ணாடி போட்ட ஒரு பையனும் இருக்காங்க
- இந்த உள்குத்துகளின் உண்மையான அர்த்தம் என்னன்னு என்கிட்டே கேட்காதீங்க. ரத்தத்தின்ரத்தங்களிடமும்,உடன்பிறப்புகளிடமும் அடிவாங்கும் சக்தி எனக்கு இல்லை
- இன்னும் பல உள்குத்துகள் படம் பார்க்கும் பொழுது கவனிச்சேன். இப்ப மறந்துடுச்சு.
- இந்த உள்குத்துகளெல்லாம் பாண்டிராஜ் plan பண்ணி வச்சாரு எத்தன தானாக அமைஞ்சதுன்னு தெரியல
கோப்பு வகை: Poems | குறிச்சொற்கள்: Anand, angel, ஈழம், எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், India, Kavithai, love, Poem, poetry, tamil
எங்கும் தெறித்து மிதிபட்டுக் கிடக்கிறது
வழிகடந்துபோகும் பறவைகள் எச்சம்
என் பறவைகள் செத்து விழும்போதெல்லாம்
சுட்டு தின்னப் படுகிறது
அல்லது சுட்டு தின்னப் படுவதற்காய்
செத்து விழுகிறது
மிதிபடும் எச்சமும்
தின்னப்படும் பறவைகளும் அன்றி
யாருக்கும் பார்க்கத் தோன்றவில்லை
பறக்க எத்தனித்ததொரு வானம்
பறக்கத் தொடங்கியதொரு வனமும்
கோப்பு வகை: Poems | குறிச்சொற்கள்: Anand, ஈழம், எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், சென்னை, முத்துக்குமார், India, Poem, poetry
மீண்டும் ஒரு முட்டாள் முளைத்திருக்கிறான்
இந்தமுறை அவனது பெயர் முத்துக்குமரன்
மூன்று தலைமுறையாய்
இவர்கள் தீர்க்கததொரு தவறை
தன் தலைமுறையில்
மட்டும் தீர்த்துவிடுவார்
என தீக்குளித்திருக்கிறான்
இவர் தீர்க்கத்தெரியாதவரோ
தீர்க்க முடியாதவரோ இல்லை தமிழனே
தீர்க்க விரும்பாதவர்
அடுத்த தேர்தலில் ஓட்டுவாங்க அவர்தம் மரணம் தேவை
அடுத்த செய்தியில் நெஞ்சுபுடைக்கப் பேச அவர்தம் தோல்வி தேவை
பேரன்களில் பத்திரிகையில் முதல் பக்கம் போட அவர்தம் ரத்தம் தெறித்த புகைப்படம் தேவை
முதல் பக்கம் புகைப்பட வரலாறு போட்டு
மூன்று நிமிடம் செய்தி வாசித்து
முன்னூறு ரூபாய் கட்ச்சிநிதி கொடுத்து புகைப்படம் எடுத்து
கிளம்பிச் செல்கையில் அவர்கள் மறந்து
அடுத்த முக்கிய வேலையை அறிக்கை தயாரிக்கச் சென்று விடுவார்
“எல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி “