கடவுளைக் கண்ட
பின் இரவின் முதற் பொழுதில்
கண் எரிந்தது கை எரிந்தது
உடம்பெங்கும் எரிந்தது
எல்லாம் எறிதலின் ஏமாற்றம்
தந்த எரிச்சலில் கடவுளைக் கொன்றேன்.
என்னைக் கண்ட ஒருவனுக்கும்
எல்லாம் எரியத் தொடங்க
அவன் என்னைக் கொல்ல வந்தான்
கடவுளைக் கொல்லப் போவதை சொல்லியபடி
o
கொத்தப் பட்ட பாம்புகளில் தப்பி
எல்லா ஏணிகளும்
பரமபதத்திற்குக் கொண்டு செல்லும்
கோபம் கொண்டு
98 ஆவது கட்டத்திலிருக்கும்
பாம்பு ஒன்று கடவுளைக் கொன்றுவிட
ஏணிகளும் பாம்புகளும் வேறு வழியின்றி
கீழ் நோக்கியே அலைந்தன.
o
“அடுத்த வேலை?”
“கடவுளைக் கொல்ல வேண்டும்!”
“ஏன்?”
“முந்தைய கடவுளைக் கொன்றுதான் இவன் கடவுளானான்!”
சொல்லிவிட்டு
நான் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன்
ஏன் கைத்தடி ஒன்று [...]
Posts Tagged ‘kaamam’
கடவுளைக் கொல்ல வேண்டும்
ஜூலை 25, 2009சினிமா 360 – சர்வம் – வன்மம் வண்ணமயம்
மே 17, 2009O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! [...]
காமத்துப் பால் கவிதைகள்-11
ஜனவரி 23, 2009உனக்கு ஆடையாய்ப்
பிறக்க அலைகிறது பருத்தி
உனக்கு ஆடையே
பிறக்கக் கூடாது
என நானும்
காமத்துப் பால் கவிதைகள்-10
ஜனவரி 23, 2009குதித்துப் பறந்து
குதுகலமாய் செல்கிறது
நீ உதடு துடைத்தெறிந்த
ஒரு வெற்றுக் காகிதம்
காமத்துப் பால் கவிதைகள்-9
ஜனவரி 20, 2009என் தேநீர் கோப்பைகள்
சூடென உன்னிடம் கொடுக்கிறேன்
குழந்தைக்கான முத்தம் போல்
நீ மெதுவாய் ஊதுகையில்
உன்னையறியாமல் கலக்கும்
ஒரு துளி அமுத எச்சிலுக்காய்
காமத்துப் பால் கவிதைகள்-6
நவம்பர் 27, 2008உன் இறுகிய
இறுக்கிய முத்தம் பெற்ற
குளிரில் துடித்த
ஒரு நாளுக்காய்
காத்திருக்கிறேன் இன்றும்
..
காமத்துப் பால் கவிதைகள்-8
நவம்பர் 15, 2008எதிரெதிராய் போரிட்டு
இருவரும் வெல்லும்
வித்தியாச யுத்தத்தின்
முதல் வாள் வீச்சாய்
உந்தன் ஒரு
கண் ஓரப் பார்வை
..