Posts Tagged ‘Kavithai’

ஈழம் இல்லாததைக் கொண்டாடுவோம்

ஜூன் 11, 2009

இதையும் வெற்றிஎன்பார் அவர்
என் இடங்தனை என்னிடம் பிடிங்கி
மீட்டு விட்டதைக் கொக்கரிப்பார்
வெற்றியென விழாக் கொண்டாடுவார்
என் சகோதரன் முதுகில் மிதிப்பார்
மிதித்த குஷியில் குதிப்பார்
பலமுறை பெற்றதை மீண்டும் பெறும்வரை குதிப்பார்
எனக்குப் பிறந்தான் வயதொத்தவனும்
என்னைப் பெற்றான் வயதொத்தவனும்
போராட்டமென செத்துத் தொலைகையில்
எவன் எப்படிப் போனால் எனக்கென்ன?
கோவணம் முதல் கோமியம் வரை இலவசமாய்க் கிடைக்கையில்
நடிகனுக்கு ஓட்டுப் போட்டு
நடிகைக்கு கோவில் கட்டினால்
சாபல்யம் அடைந்துவிடப் போகிறது ஜென்மம்

மஞ்சள்நிற மரணக் குறிப்புகள்

ஏப்ரல் 7, 2009

எங்கும் தெறித்து மிதிபட்டுக் கிடக்கிறது
வழிகடந்துபோகும் பறவைகள் எச்சம்
என் பறவைகள் செத்து விழும்போதெல்லாம்
சுட்டு தின்னப் படுகிறது
அல்லது சுட்டு தின்னப் படுவதற்காய்
 செத்து விழுகிறது
மிதிபடும் எச்சமும்
தின்னப்படும் பறவைகளும் அன்றி
 யாருக்கும் பார்க்கத் தோன்றவில்லை
 பறக்க எத்தனித்ததொரு வானம்
பறக்கத் தொடங்கியதொரு வனமும்