Posts Tagged ‘love’

சினிமா 360 – சர்வம் – வன்மம் வண்ணமயம்

மே 17, 2009

O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! [...]

மஞ்சள்நிற மரணக் குறிப்புகள்

ஏப்ரல் 7, 2009

எங்கும் தெறித்து மிதிபட்டுக் கிடக்கிறது
வழிகடந்துபோகும் பறவைகள் எச்சம்
என் பறவைகள் செத்து விழும்போதெல்லாம்
சுட்டு தின்னப் படுகிறது
அல்லது சுட்டு தின்னப் படுவதற்காய்
 செத்து விழுகிறது
மிதிபடும் எச்சமும்
தின்னப்படும் பறவைகளும் அன்றி
 யாருக்கும் பார்க்கத் தோன்றவில்லை
 பறக்க எத்தனித்ததொரு வானம்
பறக்கத் தொடங்கியதொரு வனமும்

காமத்துப் பால் கவிதைகள்-11

ஜனவரி 23, 2009

உனக்கு ஆடையாய்ப்
பிறக்க அலைகிறது பருத்தி
உனக்கு ஆடையே
பிறக்கக் கூடாது
என  நானும்

காமத்துப் பால் கவிதைகள்-10

ஜனவரி 23, 2009

குதித்துப் பறந்து
குதுகலமாய் செல்கிறது
நீ உதடு துடைத்தெறிந்த
ஒரு வெற்றுக் காகிதம்
 

காமத்துப் பால் கவிதைகள்-9

ஜனவரி 20, 2009

என் தேநீர் கோப்பைகள் 
சூடென உன்னிடம் கொடுக்கிறேன்
குழந்தைக்கான முத்தம் போல்
நீ மெதுவாய் ஊதுகையில்
உன்னையறியாமல் கலக்கும்
ஒரு துளி அமுத எச்சிலுக்காய் 
 

காமத்துப் பால் கவிதைகள்-6

நவம்பர் 27, 2008

உன் இறுகிய 
இறுக்கிய முத்தம் பெற்ற
குளிரில் துடித்த
ஒரு நாளுக்காய்
காத்திருக்கிறேன் இன்றும் 

 
..

காமத்துப் பால் கவிதைகள்-8

நவம்பர் 15, 2008

எதிரெதிராய் போரிட்டு 
இருவரும் வெல்லும்
வித்தியாச யுத்தத்தின்
முதல் வாள் வீச்சாய்
உந்தன் ஒரு
கண் ஓரப் பார்வை 
 
 
 

 
..

என் தூக்கத்தை…

ஆகஸ்ட் 23, 2008

பேசிய நாட்களில்
வார்த்தைகளும்
பேசாத நாட்களில்
மௌனங்களும்
எடுத்துச் சென்று விடும்
என் தூக்கத்தை