Posts Tagged ‘theavthai’

கடவுளைக் கொல்ல வேண்டும்

ஜூலை 25, 2009

கடவுளைக் கண்ட
பின் இரவின் முதற் பொழுதில்
கண் எரிந்தது கை எரிந்தது
உடம்பெங்கும் எரிந்தது
எல்லாம் எறிதலின் ஏமாற்றம்
தந்த எரிச்சலில் கடவுளைக் கொன்றேன்.
என்னைக் கண்ட ஒருவனுக்கும்
எல்லாம் எரியத் தொடங்க
அவன் என்னைக் கொல்ல வந்தான்
கடவுளைக் கொல்லப் போவதை சொல்லியபடி
o
கொத்தப் பட்ட பாம்புகளில் தப்பி
எல்லா ஏணிகளும்
பரமபதத்திற்குக் கொண்டு செல்லும்
கோபம் கொண்டு
98 ஆவது கட்டத்திலிருக்கும்
பாம்பு ஒன்று கடவுளைக் கொன்றுவிட
ஏணிகளும் பாம்புகளும் வேறு வழியின்றி
கீழ் நோக்கியே அலைந்தன.
o
“அடுத்த வேலை?”
“கடவுளைக் கொல்ல வேண்டும்!”
“ஏன்?”
“முந்தைய கடவுளைக் கொன்றுதான் இவன் கடவுளானான்!”
சொல்லிவிட்டு
நான் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன்
ஏன் கைத்தடி ஒன்று [...]

இரவுகள் படைத்தல்

ஜூலை 25, 2009

தீராக் கனவுகளை
தீர்க்கும் பகல்களுக்குக் காத்திருக்கும்
இரவுகள்
எனக்கென படைக்கப் பட்டவை
தீர்க்கப் பட்ட கனவுகளுக்குப் பின்
அடுத்த கனவிற்கான இரவுகள்
என்னால் படைக்கப் பட்டவை
o
எல்லாத் தனிமை இரவுகளிலும்
என்னை யாரென
எனக்குச் சொல்வது
நானா?
இன்னொரு நானா?

சினிமா 360 – சர்வம் – வன்மம் வண்ணமயம்

மே 17, 2009

O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! [...]

தேவதையின் இடம்….

செப்டம்பர் 20, 2008

கொலுசுகளுடன் குதித்து
விளையாடும் குழந்தை
மருதாணி விரல்
கொண்ட குமரி
தொட முடியாமல்
தூரத்து மஞ்சள் நிலா
எவராலும் நிரப்ப
முடிவதில்லை ஒரு
தேவதையின் இடம்….