வாசல்

பாதைகளும் கதவுகளும்
எப்போதும்
என்னைக் குழப்புகின்றன.

நகரத்தைக் கடந்து போவதாய்ச்
சொல்லி
புற நகரில் சுற்றிக்கொண்டிருந்தேன்

இரண்டாவது வீட்டின்
மூன்றாவது வாசலும்
பழங்கதையில் வரும்
பூண் போட்ட கைப்பிடி கொண்ட
வாசலும் ஒரே
விதமாகத் தெரிகின்றன

ஒரு கவிதையில்
நுழைந்துவிட்டு
இன்னொரு கவிதையின்
வரிகளை நினைத்துக்கொண்டிருந்தேன்

இப்படித்தான் குழப்புகின்றன
உங்கள் துரோகங்களும்

புத்தன்

ஒரு ரணம்
கீறப்பட்டிருக்கிறது

பிரிவின் கடைசி நிமிடத்தை
திரும்பத்திரும்ப
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

உன்மத்த இரவில்
தோளில் கைபோட்டுச் சொல்வான்
நண்பன்
இதுவும் கடந்து போகும் என

எப்போது என்ற கேள்விக்கு
பதில் சொல்லும்
திறமை வாய்ப்பதில்லை
ந்ணப்ர்களுக்கு

 நன்றி : உயிரோசை