சதைத்த கனி பிதுங்கிய

பருத்திக்காடுகளைச்

சுமந்துதிரிகிறாய்

கூடு கட்டும் பறவையின்

நேசத்துடன்.

முள் சேர்த்த

கூட்டின் வைக்கோல்

மெத்தையில் துயிலும்

குஞ்சுகளைப்போல்

இங்கு படுத்திருக்கிறேன்

புகைபடிந்த நினைவுகளைச்

சுரண்டும் ஒலிகளில்

கூசும் உடல்கள்

துடித்தடங்குகின்றன

தூக்கம் தொலைத்த இரவில்

முழுக்கப் பிழியப்பட்டபின்

தனித்துவிடப் பட்ட அடைகளைச்

சுற்றும் தேனிக்களுக்கு வழி

சொல்லும் பணி தாங்கிய

பைத்தியக்காரன் இங்குதான் இருந்தான்

oOo

361 இதழில் வெளிவந்தது. நன்றி நிலாரசிகன் & நரன்